ஐ.வாடிப்பட்டியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

ஒட்டன்சத்திரம், ஜன. 1: தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஒட்டன்சத்திரம் ஒன்றியம் ஐ.வாடிப்பட்டி ஊராட்சி பகுதியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான ‘மக்களைத் தேடி மருத்துவ திட்டம்’, கொரோனா தொற்று காலத்தில் குழந்தைகளின் கல்வி கற்றல் இடைவெளி, இழப்புகளைக் குறைத்திடும் வகையில் ‘இல்லம் தேடிக் கல்வித்திட்டம்’, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ‘மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள்’, ஏழை எளியோர் வாழும் இடத்திலேயே சிறப்பு மருத்துவச் சேவை அளிக்கும்

‘கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்’, உயர்த்தப்பட்ட மகப்பேறு நிதியுதவி திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கான பராமரிப்பு நிதியுதவி திட்டம், சுயஉதவிக்குழுக்களின் கூட்டுறவுத்துறை கடன் தள்ளுபடி மற்றும் 5 பவுன் வரை தங்க நகைக்கடன் தள்ளுபடி திட்டம் ஆகியவை குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் படக்காட்சி காண்பிக்கப்பட்டது. புகைப்படக் கண்காட்சியினைஊராட்சி செயலர் தங்கவேல் உள்ளிட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

The post ஐ.வாடிப்பட்டியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி appeared first on Dinakaran.

Related Stories: