ஐக்கிய விவசாயிகள் முன்னணி டிராக்டர் பேரணி நாகப்பட்டினம் / மயிலாடுதுறை நாகப்பட்டினத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் அவுரித்திடலில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு துணைஅமைப்பாளர் பாலா வரவேற்றார். மாவட்ட அமைப்பாளர் உதயகுமார் தலைமை வகித்தார். துணை அமைப்பாளர்கள் பாரி, செந்தாமரைசெல்வன், உதயாஎழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர்கள் கந்திலிகரிகாலன், குடியாத்தம்புவியரசி ஆகியோர் பேசினர். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர், மாவட்ட செயலாளர் கவுதமன் பேசியதாவது: ஒன்றிய அரசு இந்தியை திணிக்க தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கிறது. திமுகவும் தொடர்ந்து அதை தடுத்து கொண்டே இருக்கிறது. மும்மொழி கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சி செய்கிறது. ஆனால் ஒரு போதும் தமிழ்நாட்டில் நிறைவேறாது. தமிழ்நாட்டில் நவோதயா பள்ளி என்ற பெயரில் இந்தியை திணிக்க எடுத்து முயற்சியை திமுக தோல்வி அடைய செய்தது. அண்ணாதுரை தொடங்கி மறைந்த முதல்வர் கருணாநிதி முதல் இன்று ஆட்சி செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை தமிழ்நாட்டில் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக போராடி வருகின்றனர். ஒரு நாட்டில் வேலை இல்லாத காரணத்திற்காக அதை எதிர்த்து போராட்டம் நடைபெறும். பட்டினி போராட்டம் நடைபெறும். ஆனால் உலகில் தமிழ்நாட்டில் மட்டும் தான் மொழிப்போராட்டம் நடந்துள்ளது. மிகவும் பழமையான மொழியான சமஸ்கிருதம், சீனா மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. ஆனால் தமிழ்மொழிக்கு மட்டும் தான் எழுத்துவடிவம் உள்ளது. செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இதை கண்டு பொறாமை அடையும் ஒன்றிய அரசு இந்தி மொழியை திணிக்க பார்க்கிறது. மொழியை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த தியாகிகள் தமிழ்நாட்டில் மட்டும் தான் இருந்தனர். இன்னும் இருக்கின்றனர். எனவே தான் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் முழு பொறுப்பையும் திமுக பெற்றுள்ளது. இந்த பொறுப்பை மாற்று கட்சியினர் யாரும் பெற தகுதியில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post ஐக்கிய விவசாயிகள் முன்னணி டிராக்டர் பேரணி நாகப்பட்டினம் / மயிலாடுதுறை நாகப்பட்டினத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: