ஐஆர்சிடிசியில் ஆதார் இணைத்தால் மாதத்திற்கு 24 டிக்கெட் முன்பதிவு செய்யலாம்: ரயில்வே வாரியம் அறிவிப்பு

புதுடெல்லி: ஐஆர்சிடிசியில் ஆதார் எண்ணை இணைத்தால் பயணிகள் ஒரு மாதத்திற்கு 24 ரயில் டிக்கெட்டுக்குளை முன்பதிவு செய்யலாம்’ என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதிகளை சிறப்பாக மேம்படுத்தி வருகின்றது. இதற்கு முன்னதாக ஐஆர்சிடிசியானது, ஒருவர் மாதத்திற்கு 6 டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்கு அனுமதித்தது. அதே நேரத்தில் ஐஆர்சிடிசியுடன் ஆதாரை இணைத்திருந்தால் அவர் 12 டிக்கெட்டுக்கள் வரை பதிவு செய்ய முடியும். இந்நிலையில், தற்போது ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு டிக்கெட்டுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி,  ஐஆர்சிடிசியுடன் ஆதார் எண்ணை இணைத்திருந்தால் அந்த நபர், ஒரு மாதத்திற்கு 24 ரயில் டிக்கெட்டுக்கள் வரை பதிவு செய்ய முடியும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. மேலும் ஆதார் இணைக்காமல் இருக்கும்பட்சத்தில் மாதத்திற்கு 12 டிக்கெட்டுக்கள் வரை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post ஐஆர்சிடிசியில் ஆதார் இணைத்தால் மாதத்திற்கு 24 டிக்கெட் முன்பதிவு செய்யலாம்: ரயில்வே வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: