எஸ்பிஐயில் ரூ.352 கோடி மோசடி; நகை நிறுவனம் மீது சிபிஐ வழக்கு

புதுடெல்லி:   வங்கியில் ரூ.352 கோடி கடன் மோசடி செய்ததாக 3 நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு பதிந்துள்ளது. மகாராஷ்டிரா,ஜல்காவ்வில், ராஜ்மல் லக்கிசந்த் ஜூவல்லர்ஸ், ஆர்எல் கோல்ட், மன்ராஜ் ஜூவல்லர்ஸ் ஆகிய நகை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் ரூ.352 கோடி கடன் பெற்று விட்டு மோசடி செய்துள்ளதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சிபிஐயிடம் புகார் அளித்துள்ளது. அந்த புகாரில்,எப்ஐஆரில் பெயரிடப்பட்ட நிறுவனங்களின் கணக்குகள் ராஜ்மல் லக்கிசந்துக்கு கொள்முதல் செய்தததற்காக பணம் செலுத்தியதை காட்டுகின்றன. அதற்கு விற்கப்பட்ட பொருட்களுக்கான வரவுகள் நிலுவையில் இருப்பதாக  தெரிவித்து  மோசடி செய்துள்ளனர். வங்கியில் காட்டப்பட்ட நிலையான சொத்துக்கள் வங்கிக்கு தெரியாமல் வேறொருவருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் வங்கியில் இருந்து கடன் வசதிகளை பெற்று  அவை எதற்காக பெறப்பட்டதோ அதற்கு அல்லாமல் வேறு பயன்பாட்டிற்கு திருப்பி விட்டுள்ளனர். புகாரையடுத்து நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஈஸ்வர்லால் சங்கர்லால் ஜெயின் லால்வானி, மனிஷ் ஈஸ்வர்லால் ஜெயின் லால்வானி, புஷ்பாதேவி ஈஸ்வர்லால் ஜெயின் லால்வானி, நீதிகா மனிஷ் ஜெயின் லால்வானி ஆகியோர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது….

The post எஸ்பிஐயில் ரூ.352 கோடி மோசடி; நகை நிறுவனம் மீது சிபிஐ வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: