எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக ரூ.2.22 கோடி மோசடி செய்த 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

சென்னை: எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.2.22 கோடி மோசடி செய்த 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சென்னை மவுலிவாக்கம் ராஜகோபால் அவென்யூ பகுதியை சேர்ந்த ஆதவன் தனது மகளை டாக்டருக்கு படிக்க வைக்க விரும்பினார். இதையறிந்த சேலத்தை சேர்ந்த ஜான் பீட்டர்(50), வேலூரை சேர்ந்த ஜெய்சிங் (51), காட்பாடியை சேர்ந்த சில்வர் ஸ்டார் ஜேம்ஸ் (40), புதுச்சேரி முதலியார் பேட்டையை சேர்ந்த டாக்டர் இளங்கோ (36) உள்பட 6 பேர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக கூறி ஆதவனிடம் இருந்து கடந்த 2013ம் ஆண்டு ரூ.35 லட்சம் பெற்றுள்ளனர். ஆனால் மருத்துவ சீட் வாங்கி கொடுக்கவில்லை. இதேபோல், வேறு சிலரிடம் என மொத்தமாக ரூ.2 கோடியே 22 லட்சத்து 50 ஆயிரம் பெற்று மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆதவன் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அவர்களை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கில் ஜான் பீட்டர், ஜேம்ஸ், டாக்டர் இளங்கோ ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. …

The post எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக ரூ.2.22 கோடி மோசடி செய்த 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Related Stories: