எம்எல்ஏ தொடங்கி வைத்தார் அரியலூர் சிஐடியு சார்பில் திருமெய்ஞான தியாகிகள் தினம்

அரியலூர், ஜன.21:அரியலூர் சிஐடியு சார்பில் திருமெய்ஞான தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. 19.1.1982 அன்று அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தின் போது, காவல் துறையினர் துப்பாக்கி சூட்டில் பலியான திருமெய்ஞான தியாகிகள் அஞ்சான், நாகூரான், மன்னார்குடி ஞானசேகர் ஆகியோருக்கு ஆண்டு தோறும் அஞ்சலி செலுத்தும் வகையில் சிஐடியு சார்பில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி அரியலூர் சிஐடியு அலுவலகம் முன்பு தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. சிஐடியு மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமையில், மாவட்டச் செயலர் துரைசாமி, துணைத் தலைவர் சிற்றம்பலம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலர் அருணன்,சாலை போக்குவரத்து தொழிற்சங்க மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

The post எம்எல்ஏ தொடங்கி வைத்தார் அரியலூர் சிஐடியு சார்பில் திருமெய்ஞான தியாகிகள் தினம் appeared first on Dinakaran.

Related Stories: