ஊத்துக்கோட்டையில் மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு

 

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இதில், விவசாய அறிவியல் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவர்களூக்கு நேற்று பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ், சிட்ரபாக்கம் பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில் காய்கறி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை எப்படி தரம் பிரிக்கிறார்கள் என்றும், மண்புழு உரம் தயாரித்தல் குறித்தும், சொட்டு நீர்பாசனம் அமைத்தல், தோட்டகலை பராமரிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் பாலிதீன் பைகளை துகள்களாக மாற்றி தார்சாலை அமைப்பது குறித்தும், மக்கும் குப்பைகள் உரமாக்குவது குறித்தும் காய்கறிகளை நறுக்கும் எந்திரம் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இதில், தூய்மை பணி மேற்பார்வையாளர் செலபதி, கீரின் சர்வீஸ் டிரஸ்ட் மேற்பார்வையாளர்கள் சீனிவாசன், முனுசாமி பரப்புரையாளர்கள் சுஜாதா, மணிமேகலை மற்றும் தூய்மை பணியாளர்கள், ஆசிரியர்கள் மதியழகன், பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஊத்துக்கோட்டையில் மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: