ஊட்டி மலர் கண்காட்சி நடத்தும் தேதி அறிவிப்பதில் மவுனம்-சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் குழப்பம்

ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழாவிற்கான தேதி, இதுவரை அறிவிக்கப்படாமல் தோட்டக்கலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மவுனம் சாதித்து வருகிறது.  இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் சமவெளிப்பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் குளு குளு காலநிலையை அனுபவிக்க ஆண்டுதோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் ஊட்டி வருவது வழக்கம். வெளியூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடாவில் இருந்து நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக ஆண்டு தோறும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, படகு போட்டி, படகு அலங்காரம், குன்னூரில் பழக்  கண்காட்சி, கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி மற்றும் கூடலூரில் வாசனை திரவிய பொருட்களின் கண்காட்சி மற்றும் கோடை விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சி ஆகியவைகள் தோட்டக்கலைத்துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், மலர் கண்காட்சி மிகவும் சிறப்பாக நடத்தப்படும் நிலையில், இதனை காண வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்வார்கள்.மே மாதம் இரண்டாம் வாரத்தில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். மலர் கண்காட்சி உட்பட பல்வேறு கண்காட்சிகள் மற்றும் கோடை விழாக்கள் நடக்கும் தேதிகள் முன்கூட்டியே அறிவித்தால் மட்டுமே வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் முன்னதாக டிக்கெட்டுகள், அறைகள் புக்கிங் செய்ய முடியும். இதற்காக, மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறையும், ஆண்டுதோறும் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்திற்கு முன்னதாக ஆலோசனை கூட்டம் நடத்தி விழா நடக்கும் தேதிகளை அறிவித்துவிடுவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக மலர் கண்காட்சி நடத்தப்படவில்லை. இம்முறை கொரோனா பாதிப்பு முற்றிலும் குறைந்து காணப்படும் நிலையில் வழக்கம் போல், மலர் கண்காட்சி உட்பட பல்வேறு கண்காட்சிகள் மற்றும் கோடை விழாக்கள் நடத்தும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இம்மாதம் துவக்கதில் இதற்கான கூட்டம் நடத்தப்பட்டு விழா நடத்தப்படும் தேதிகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை மலர் கண்காட்சி நடத்துவது குறித்த தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. மேலும், இதற்கான கூட்டமும் இதுவரை தோட்டக்கலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடத்தாமல் உள்ளது. பொதுவாக மலர் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகளை காண வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தே அதிகளவு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுதப்பது வழக்கம். மலர் கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகள், கண்காட்சி நடக்கும் தேதி தெரிந்தால், அதற்கு ஏற்றார்போல் ரயில், விமானம் மற்றும் சொகுசு பஸ்களின் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்ய முடியும். ஆனால், இதுவரை மலர் காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும், சுற்றுலா பயணிகள் பயண சீட்டு, லாட்ஜ் அறைகள் போன்றவைகளை புக்கிங் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்….

The post ஊட்டி மலர் கண்காட்சி நடத்தும் தேதி அறிவிப்பதில் மவுனம்-சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் குழப்பம் appeared first on Dinakaran.

Related Stories: