ஊட்டி ஜெஎஸ்எஸ் பார்மசி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

 

ஊட்டி, ஜூலை 2: ஊட்டியில் உள்ள ஜெஎஸ்எஸ் பார்மசி கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
விழாவில், கல்லூரி முதல்வர் தனபால் தலைமை வகித்தார். துணை முதல்வர் அருண், துறை தலைவர் பொன்னுசங்கர் முன்னிலை வகித்தனர்.  விழாவில், பல்வேறு பட்டயம் மற்றும் பட்டப் படிப்புகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. மேலும், பட்டம் பெற்ற மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

ெதாடர்ந்து கல்லூரி முதல்வர் தனபால் பேசுகையில், ‘‘இன்று பட்டம் பெற்ற மாணவர்கள், மருந்துத்துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகும் முக்கிய கையெழுத்தாளர்கள். சமூக நலனுக்காக பணியாற்றும் மனப்பான்மையுடன் முன்னேற வேண்டும் என்றே நாங்கள் இங்கே உங்களை தயார் செய்துள்ளோம். இந்த விழா, கல்லூரி வாழ்க்கையின் ஒரு முக்கிய கட்டமாக மட்டுமல்லாமல், வாழ்க்கை பயணத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் நிகழ்வாகவும் அமைந்தது.
எதிர்கால மருந்தாளர்களுக்கு வாழ்த்துக்கள்’’ என்றார். தொடர்ந்து, மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுடன் குழு புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.

 

The post ஊட்டி ஜெஎஸ்எஸ் பார்மசி கல்லூரியில் பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: