உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி சுலபமல்ல: மாண்டி பனேசர் கருத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி சுலபமாக வெற்றிபெற இயலாது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் மாண்டிபனேசர் கூறினார். இதுதொடர்பாக பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் “நியூசிலாந்து சிறந்த அணி. அவர்களிடம் சில இடதுகை பேன்ஸ்மேன்கள் உள்ளனர். அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சிறப்பாக பந்துவீச கூடியவர் என்பதால் இந்திய அணியின் முதல் தேர்வாக அஸ்வின் இருப்பார். நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடி வருவதால், இந்திய அணிக்கு வெற்றி சுலபமாக கிடைத்துவிடாது. போட்டி நிச்சயம் பரபரப்பாக இருக்கும். சீதோஷ்ண நிலை இங்கிலாந்து அணிக்குச் சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது. இங்கிலாந்து மைதானங்களும், நியூசிலாந்து மைதானங்களும் கிட்டதட்ட ஒரே மாதிரி இருக்கும். இருப்பினும், அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசி இடது கை பேட்ஸ்மேன்களான ஓபனர்கள் டிவோன் கான்வே, லதாம் ஆகியோர் விக்கெட்டை விரைந்து எடுக்க வாய்ப்புள்ளது. நியூசிலாந்து அணியில் டிம் சௌத்தி நல்லமுறையில் பந்துவீசி வருவதால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பின்னடைவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்….

The post உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி சுலபமல்ல: மாண்டி பனேசர் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: