உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்களுக்கு இந்திய கல்லூரிகளில் இடமளிக்க முடியாது: மக்களவையில் ஒன்றிய அரசு உறுதி

புதுடெல்லி: வெளிநாடுகளில் மருத்துவம் படித்து பாதியில் நாடு திரும்பும் மாணவர்களை இந்திய மருத்துவக் கழகம் அல்லது பல்கலைக் கழகத்துக்கு மாற்ற தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் வழங்கவில்லை என்று ஒன்றிய அரசு மக்களவையில் தெரிவித்தது.போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களை இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கும் மாநிலங்களின் முடிவை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அங்கீகரிக்கவில்லையா? என்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்து ஒன்றிய சுகாதார அமைச்சர் பாரதி பிரவீன் பவார் கூறியதாவது: இந்திய மருத்துவக் கழக சட்டம் 1956, தேசிய மருத்துவ ஆணையச் சட்டம், 2019ன் படி, வெளிநாட்டு மருத்துவ கல்லூரிகளில் படித்து பாதியில் நாடு திரும்பும் இந்திய மாணவர்களுக்கு இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடமளிக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ அனுமதியில்லை. அதற்கான விதிமுறைகள் அமலில் இல்லை. தேசிய மருத்துவ ஆணையமும் அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்….

The post உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்களுக்கு இந்திய கல்லூரிகளில் இடமளிக்க முடியாது: மக்களவையில் ஒன்றிய அரசு உறுதி appeared first on Dinakaran.

Related Stories: