காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடலோர காவல்படையினர் சிறை பிடித்தனர். காரைக்கால் அடுத்த கீழ காசாக்குடி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் உலகநாதன் (28). இவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து கீழ காசாகுடி மேடு பகுதியை சேர்ந்த கார்த்தி, செல்வமணி, அசோகன், மதன், அபிஸ், மணிவண்ணன் உட்பட 12 மீனவர்கள் நேற்றுமுன்தினம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.இந்நிலையில் நேற்று மாலை முல்லைத்தீவு அருகே இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கீழ காசாக்குடி மேடு மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்தனர். பின்னர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 12 பேரையும் இலங்கை கடற்படை துப்பாக்கி முனையில் கைது செய்தது. மேலும் இலங்கை கடற்படை மீனவர்களின் விசைபடகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் 12 மீனவர்களையும் இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். …
The post இலங்கை கடலோர காவல்படை அட்டூழியம்: காரைக்கால் மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.