இரைப்பை காஸ்டிரிக் பிரச்னையா? கவலை வேண்டாம்!

அவசர உலகம், முறையற்ற வாழ்க்கை முறை என இன்று கேஸ்ட்ரிக் மற்றும் அசிடிட்டி பிரச்னை மிகச் சாதாரண பிரச்னையாக மாறிவருகிறது. ஆனால் எதிர்காலத்தில் வரப்போகும் பெரிய பிரச்னைகளாக  உடல் எடை அதிகரிப்பு அதனால் ஒபிசிட்டி, இதயப் பிரச்னை, இரத்தத்தில் கொழுப்பு என  துவங்கி கேன்சர் வரையிலும் கூட வருவதற்கு இந்த அல்சர்தான் முதல் காரணி. ஆரம்பத்திலேயே தடுப்பது எப்படி? சொல்கிறார் வயிறு குடல் துறை டாக்டர். கவிதா ராஜன் (Consultant – Medical Gastroenterology & Hepatology) அல்சர் அல்லது அசிடிட்டி ஆரம்பக் காரணிகள் என்ன?‘முதலும் முக்கிய காரணம் காலை உணவு தவிர்ப்பதுதான். அதனுடைய பெயரே பிரேக்-ஃபாஸ்ட் அதாவது ஒரு பெரிய இடைவேளையான 7 முதல் 10 மணி நேரம் சாப்பிடாம விரதம் போலத்தான் இருப்போம். அதை உடைக்கிறதுதான் பிரேக்-ஃபாஸ்ட். வயிற்றுக்குள் ஆசிட் உருவாகும், அந்த நேரத்திலே உணவு வயித்திலே இல்லாம இருந்தா ஆசிட் உங்க குடல், செரிமான உறுப்புகளை பாதித்து அல்சர் (புண்) ஏற்படும். அடுத்து வெளிப்புற உணவு, அதிக காரம், மசாலா, ஏதோ எண்ணெய், சுகாதாரமற்ற உணவு, இதெல்லாம் ஒரு காரணம். அடுத்த பெரிய காரணிகள் தூக்கமின்மை, மன உளைச்சல்,  சாப்பிட்ட உடனே குறைஞ்சது ரெண்டு மணி நேரம் இடைவேளை கூட இல்லாமல் உடன் படுப்பது. அல்சர் மற்றும் அசிடிட்டி பிரச்னையை எப்படி ஆரம்பநிலையிலேயே கண்டறிவது? முதலில் வயிற்றில் எரிச்சல், மெதுவாக நெஞ்சு எரிச்சல், ஏப்பம், வயிறு நிறைந்த தன்மை என ஆரம்பித்து பிறகு அல்சர், இரத்தவாந்தி, குடல் அடைப்பு, கேன்சர் என்று முடியும். இதற்கு பெரிய அளவில் வயது வித்தியாசமே கிடையாது. H.Pylori கிருமி தாக்கமும் இருக்கலாம். சரியான அளவில் சாப்பாடு, சீரான தூக்கம் இல்லாத பலருக்கும் அல்சர் வர வாய்ப்புண்டு. அசிடிட்டிக்கு என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன?‘முதலில் எதற்கும் தானாகவே மருந்து எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு பிரச்னைகளும், நோய்களின் தன்மையும், தீவிரமும் பொருத்து மனிதர்களுக்கு மனிதர் மாறுபடும். ஆரம்பக் கட்டத்திலே  வெறும் வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுப் பழக்கங்களில் மாற்றங்கள் செய்வது, பழங்கள் அதிகம் உட்கொள்வது மற்றும் சில மருந்துகள் மூலமாகவே குணப்படுத்தலாம். வெறும் மருந்துகள் மூலமாக அல்லது உணவு பழக்கங்களை மாற்றுவதன் மூலமே குணப்படுத்தலாம். பிரச்னை பெரிதாக இருக்கும் பட்சத்தில்தான் 45 வயது கடந்த வராயின் எண்டோஸ்கோபி மூலம் நோயின் வீரியம் ஆராய்ந்து அதற்கான சிகிச்சை கொடுப்போம்….

The post இரைப்பை காஸ்டிரிக் பிரச்னையா? கவலை வேண்டாம்! appeared first on Dinakaran.

Related Stories: