இந்தியாவின் 60% மக்களின் குரல்களை ஒன்றிய அரசு நசுக்கியுள்ளது. அவமானப்படுத்தியுள்ளது : ராகுல் காந்தி கடும் தாக்கு!!

டெல்லி :நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13 வரை நடத்த திட்டமிடப்பட்டன. ஆனால், கூட்டம் தொடங்கிய முதல் நாளிலிருந்தே பெகாஸஸ், வேளாண் சட்டம், பெட்ரோல் விலை குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதன் காரணமாக கூட்டத்தொடர் நிறைவடைய 2 நாள்கள் மீதம் இருந்த நிலையில், நேற்று(ஆக.11) காலையுடன் மக்களவையும், மாலையுடன் மாநிலங்களவையும் முடித்துக் கொள்ளப்பட்டன.இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தை முன்கூட்டியே முடித்தது, பெகாஸஸ் விவகாரம், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிராக ராகுல் காந்தி தலைமையில் திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து விஜய் சவுக் வரை பேரணியாக சென்றனர். இந்த பேரணியில், காங்கிரஸ், திமுக, திரிணமூல் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராகுல் காந்தி, ‘பெகாஸஸ் பிரச்னையை எழுப்பி விவாதிக்க கோரினோம். ஒன்றிய அரசு அனுமதிக்கவில்லை.விவசாயிகள் பிரச்சனை பற்றியும் பேச நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அனுமதிக்கவில்லை.நாடாளுமன்றத்தில் எங்களை பேச அனுமதிக்காததால் மக்களை சந்திக்கிறோம்.இந்தியாவின் 60% மக்களின் குரல்களை ஒன்றிய அரசு நசுக்கியுள்ளது. அவமானப்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற அவைகளில் எதிர்க்கட்சிகளை பேசவிடாதது ஜனநாயக படுகொலை,’என்றார். …

The post இந்தியாவின் 60% மக்களின் குரல்களை ஒன்றிய அரசு நசுக்கியுள்ளது. அவமானப்படுத்தியுள்ளது : ராகுல் காந்தி கடும் தாக்கு!! appeared first on Dinakaran.

Related Stories: