ஆற்றில் குளித்த 2 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி

 

பாலக்காடு, மே 7: மானாந்தவாடி அருகே ஆற்றில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் தண்ணீரில் அடித்துச்சென்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் மானாந்தவாடியை அடுத்த வாழப்பழாங்குடியை சேர்ந்த பினுவின் மகன் அஜின் பினு (15), இவர் கல்லோடியில் உள்ள தனியார் பள்ளியில் 10 வது வகுப்பு படித்து வந்தார். களப்புரைக்கல்லை சேர்ந்த பினீஷின் மகன் கிறிஸ்டி பினீஷ் (13), இவர் கணியாரம் தனியார் உயர்நிலைப்பள்ளியில் 8 வது வகுப்பு படித்து வந்தார். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் மாலை வாளாடு பகுதியிலுள்ள தடுப்பணை பகுதியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

பின்னர், ஆற்றில் தண்ணீரில் விளையாடியபடி குளித்து கொண்டிருந்தனர். அப்போது இருவரும்ஆற்று தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் நீரில் மூழ்கி மாணவர்களை மீட்டு வயநாடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து மானாந்தவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டனர்.

The post ஆற்றில் குளித்த 2 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி பலி appeared first on Dinakaran.

Related Stories: