ஆப்பிள் ஷீரா

எப்படிச் செய்வது?ஆப்பிளின் தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கி,
50 மி.லி. பாலைச் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
நான்ஸ்டிக் பேனில் நெய்யைச் சேர்த்து பாதாம், முந்திரியை வறுத்து தனியே
எடுத்து வைக்கவும். மீதியுள்ள நெய்யில், மிதமானச் சூட்டில் ரவையைப்
பொன்னிறமாக வறுத்துக் கொண்டு, 1 கப் தண்ணீர் சேர்த்து ரவையை வேகவைத்துக்
கொள்ளவும். அதனுள் பாலைச் சேர்த்து மிதமானச் சூட்டில் ரவை கலவையை கிளறவும்.
இத்துடன் சர்க்கரையைச் சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறவும். பால்,
வேகவைத்த ரவையுடன் சேர்ந்து சுண்டியதும், ஆப்பிள் விழுதை சேர்த்து 5-10
நிமிடங்கள் கலவையைச் சூடு செய்து இறக்கவும். நெய்யில் வறுத்த பாதாம்,
முந்திரியை அலங்கரித்து சூடாக பரிமாறவும்.குறிப்பு: பழுத்த மாம்பழம், சப்போட்டாவிலும் ஜீராவைச் செய்யலாம்.

The post ஆப்பிள் ஷீரா appeared first on Dinakaran.

Related Stories: