அழகர்கோவில் சித்திரை திருவிழாவுக்கு கொட்டகை முகூர்த்தக்கால்

*ஏப்.16ல் வைகையில் இறங்குகிறார் கள்ளழகர்அலங்காநல்லூர் : அழகர்கோவில் சித்திரை திருவிழாவுக்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கொட்டகை முகூர்த்தக்கால் நடப்பட்டது. ஏப்.16ல் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார். மதுரை அழகர்கோவிலில் நடக்கும் திருவிழாக்களில் சித்திரை பெருந்திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். இவ்விழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் பிப்.7ம் தேதி சப்பர முகூர்த்த விழா நடந்த. தொடர்ந்து சித்திரை பெருந்திருவிழாவையொட்டி இன்று காலை 10.30 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கொட்டகை முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. முன்னதாக கோயில் மண்டப வளாகத்தில் யாளி முகத்திற்கு நாணல் புல், மாவிலை, பூ மாலைகள் வைத்து அழகர்கோவில் திருத்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மேளதாளம் முழங்க வர்ணம் பூசப்பட்ட கொடிமரம் கோயில் உள்பிரகாரம், வெளிப்புற ராஜகோபுரம் முன்பாக முகூர்த்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து ஏப்.14ம் தேதி கள்ளழகர் என்கின்ற சுந்தராஜ பெருமாள் தங்கப்பல்லக்கில் மதுரைக்கு எழுந்தருளுகிறார்.ஏப்.15ம் தேதி கள்ளழகர் எதிர்சேவை நடக்கிது. ஏப்.16ம் தேதி காலை 5.50 மணிக்கு மேல் 6 மணிக்குள் கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏப்.17ம் தேதி சேச, கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷி முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், தசாவதார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏப்.18ம் தேதி மோகன அவதாரத்தில் கள்ளழகர் எழுந்தருளல், அன்று இரவு பூப்பல்லக்கு அலங்காரம் நடைபெறுகிறது. ஏப்.19ம் தேதி பூப்பல்லக்கில் எழுந்தருளல், ஏப்.20ம் தேதி அப்பன் திருப்பதியில் கள்ளழகர் எழுந்தருளல், பின்னர் பகல் 1.30க்கு கள்ளர் திருக்கோலத்தில் அழகர்மலை வந்து சேருதல். இத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம் தலைமையில் கோயில் துணை ஆணையர், செயல் அலுவலர் அனிதா மற்றும் கோயில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்….

The post அழகர்கோவில் சித்திரை திருவிழாவுக்கு கொட்டகை முகூர்த்தக்கால் appeared first on Dinakaran.

Related Stories: