அரவக்குறிச்சி காசி விஸ்வநாதர் ஆலயம் அருகில் விபத்தை தவிர்க்க வேகத்தடை அமைக்கவேண்டும்

 

அரவக்குறிச்சி, மே 24: அரவக்குறிச்சி காசி விஸ்வநாதர் ஆலயம் அருகில் வேகத்தடை அமைக்கவேண்டுமென மக்கள் கோரிக்கைவைத்துள்ளனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில் காசி விசுவநாதர் ஆலயம் உள்ளது. இக்கோயிலின் அருகிலேயே கோவிலூர் செல்லும் சந்திப்பு சாலை உள்ளது. இப்பகுதியில் அதிக அளவில் பேருந்து, லாரி, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. காசி விஸ்வநாதர் ஆலயம் அருகில் கரூர் சாலையில் வேகத்தடை இல்லை . இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. எனவே பக்தர்கள் சாலையை கடக்கும் போது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி விபத்து ஏற்படுத்தும் நிலை ஏற்படுகிறது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தலையிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வேகத்தடையை உடனடியாக அமைக்த்து அசம்பாவித சம்பவத்தை தவிர்க்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

The post அரவக்குறிச்சி காசி விஸ்வநாதர் ஆலயம் அருகில் விபத்தை தவிர்க்க வேகத்தடை அமைக்கவேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: