அரசு நீச்சல் குளத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு பயிற்சி

சேலம், ஏப்.6: சேலம் காந்தி ஸ்டேடியத்தில் அரசு நீச்சல் குளம் உள்ளது. இந்த குளத்தில் அவ்வப்போது மண்டல, மாவட்ட, மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது கோடைக்காலம் என்பதால், பள்ளி சிறுவர், சிறுமிகள் நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் முதல்கட்ட பயற்சி முகாம் வரும் 16ம் தேதி வரையும், இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் 17ம் தேதி முதல் 30ம் தேதி வரையும், மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் மே 2ம் தேதி முதல் 14ம் தேதி வரையும், நான்காம் கட்ட பயிற்சி முகாம் 16ம் தேதி முதல் 28ம் தேதி வரையும், ஐந்தாம் கட்ட பயிற்சி முகாம் 30ம் தேதி முதல் ஜூன் 11ம் தேதி வரை நடக்கிறது.

வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் பயிற்சி முகாம் நடக்கிறது. இந்நாட்களில் காலை 7 மணி முதல் 8 மணி வரை (சிறுவர், சிறுமியர்), காலை 8 மணி முதல் 9 மணி வரை (சிறுவர், சிறுமியர்), காலை 9 மணி முதல் 10 மணிவரை (பெண்கள் மட்டும்), மாலை 3 மணி முதல் 4 மணி வரை (சிறுவர், சிறுமியர்), மாலை 4 மணிமுதல் 5 மணி வரை (சிறுவர், சிறுமியர்), மாலை 5 மணி முதல் 6 மணி வரை (பெண்கள் மட்டும்) நடக்கிறது. 12 நாட்களுக்குரிய பயிற்சி கட்டணம் ₹1500, ஜிஎஸ்டி 18 சதவீதம் சேர்த்து ₹1770 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், ஒரு மணிநேர நீச்சல் கட்டணம் ₹59 என வசூலிக்கப்படுகிறது.

The post அரசு நீச்சல் குளத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: