அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி, பிப். 16:அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி, கையில் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி கோட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை துணை தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். கிளை செயலாளர்கள் பிச்சையா, பண்டாரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர்கள் பட்டுராஜன், ஞானராஜ் பாண்டியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் ஜிடிஎஸ் ஊழியர்களுக்கு டார்க்கட் நெருக்கடி கொடுத்து துன்புறுத்த கூடாது என்ற டிஜி உத்தரவை அமல்படுத்த வேண்டும். ஜிடிஎஸ் ஊழியர்களுக்கு சாத்தியமற்ற இலக்கு நிர்ணயிக்கக் கட்டாது. அவசர தேவைக்கு விடுப்பு கேட்கும் ஊழியர்களுக்கு டார்க்கெட் முன் வைத்து விடுப்பு மறுக்கக் கூடாது.உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

The post அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: