டெல்லி: இறக்குமதி வரிகளை உயர்த்தி, தங்கம் வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்த போதிலும், தங்கம் இறக்குமதி இந்தியாவில் அதிகரித்துள்ளது. தங்கத்தின் இறக்குமதி கடந்தாண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு மே மாதம் 34% உயர்ந்து 3.41 பில்லியன் டாலராக அதிகரிப்பு. அதே சமயம் வெள்ளி இறக்குமதி 86.65% குறைந்துள்ளது.
