புதுடெல்லி: 2027ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீடு பட்டியல், மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு பணிகள் ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கியது. செப்டம்பர் மாதம் வரை இந்த பணிகள் மேற்கொள்ளப்படும். தற்போது வரை 23 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்துள்ளதாக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் நாகாலாந்தில் 15 நாட்கள் கொண்ட சுய கணக்கெடுப்பு செயல்முறையானது தற்போது நடைபெற்று வருகின்றது. அதைத் தொடர்ந்து ஜூலை ஒன்று முதல் ஜூலை 30 வரை களப்பணிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத், ஜம்மு காஷ்மீர், லடாக், புதுச்சேரி மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களில் இந்த பணிகள் ஏற்கனவே நடந்து வருகின்றன. 2ம் கட்ட பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும்.
