×

சாதி மறுப்பு திருமண விவகாரத்தில் பிற்போக்கு சக்திகளை ஊக்குவிக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: கடந்த மார்ச் 23ம் தேதி டெல்லியில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினர், பெண்ணின் குடும்பத்தினரால் தங்களுக்கு ஆணவ கொலை மிரட்டல் இருப்பதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு இருந்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 30ம் தேதி தம்பதியினருக்கு அவர்கள் வசிக்கும் உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத்தில் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. ஆனால், பெண்ணை அவரது குடும்பத்தினர் சந்திக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தம்பதியினர் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகிய வழக்கானது நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது பிறப்பித்த உத்தரவில்,”இத்தகைய பிற்போக்குத்தனமான சக்திகளை (பெண்ணின் குடும்பத்தார்) ஒருபோதும் ஊக்குவிக்கக் கூடாது. அவர்கள் தம்பதியினரை வேட்டையாடி வருகிறார்கள். இது சரியான நடைமுறை கிடையாது. இந்த விவகாரத்தில் முன்னதாக ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court ,New Delhi ,Delhi ,
× RELATED கண்ணூரில் இருந்து ஜெட்டா சென்ற...