×

நீட் மறுதேர்வுக்கான பாதுகாப்பு விதிகள் மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது: அண்ணாமலை கருத்து

சென்னை: நீட் மறு தேர்வுக்கான பாதுகாப்பு விதிகள் மாணவர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

வீ தி லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர் அண்னாமலை தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்), மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) ஆகிய 2 அடுக்கு பாதுகாப்பு, இந்திய விமானப்படை மூலம் வினாத்தாள்களை ஏற்றிச் செல்லுதல், ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய 4 அடுக்கு சிசிடிவி கண்காணிப்பு, தேர்வு மையத்திற்குள் நுழையும் முன் பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகார சோதனை, பல கட்ட சோதனைகள் மற்றும் பிரதமரின் அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்படும் பல அடுக்கு மேற்பார்வை, கேட்பதற்கு ஏதோ அதிமுக்கிய, ரகசிய ராணுவ மென்பொருள் வாங்குவதற்கான ஏற்பாடுகள் போல தோன்றுகிறதா?.

இது ஜூன் 21 அன்று நடக்கவுள்ள நீட் மறுதேர்வுக்காக மத்திய கல்வி அமைச்சகம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகும். வினாத்தாள் கசிவை தடுப்பதற்காக அரசு மேற்கொண்டுள்ள கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும், தீவிர கண்காணிப்பையும் ஒவ்வொரு மாணவரும் நிச்சயம் பாராட்டுவார்கள். ஆனால், தேர்வு மையத்திற்குள் நுழைவதற்கு முன் நடத்தப்படும் தீவிர சோதனை, நீட்டிக்கப்பட்ட உடல் பரிசோதனை, ஒட்டுமொத்த தேர்வு நேரம் 180 நிமிடங்களிலிருந்து 195 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது ஆகியவை மாணவர்களிடையே ஏற்கனவே இருக்கும் தேர்வு பயத்தையும் மன அழுத்தத்தையும் மேலும் அதிகரிக்கவே செய்யும்.

தேர்வுக்காக இவ்வளவு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்வதில் மாணவர்கள் இன்னும் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Annamalai ,Chennai ,We the Leaders' ,Central Reserve Police Force ,CRPF ,Central… ,
× RELATED ஜம்மு எல்லையில் வட்டமிட்ட பாக். டிரோன்