‘அப்பா வேணாம்ப்பா’, ‘அதையும் தாண்டி புனிதமானது’ ஆகிய படங்களை தொடர்ந்து ஆர்.வெங்கட்டரமணன் எழுதி இயக்கி, வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ள படம், ‘முதற்கனல்’. போதை பொருள் பழக்கத்தால் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை எப்படி சீரழிகிறது, அவர்களால் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படம் உருவாகியுள்ளது.
புதுமுகங்கள் அஸ்வின், விக்னேஷ், ராஜேஷ், யோகேஷ், லட்சுமணன், ஆதி, ஹரி கிருஷ்ணன், ஹரி, பாலாஜி, ஆகாஷ், ஸ்ரீஜித், பிரதாப், தீபா பத்மநாபன், கருப்பசாமி, திருவேங்கடகிருஷ்ணன், டாக்டர் சிவா, ராமசாமி, தனுஜா, ரோகிணி, சஜன், மணி குமார், ஷிவகுமார், ருக்மணி, இலக்கியா, அருள் பிரகாஷ், சந்திரசேகரன், மதன், கணேஷ் சுப்பிரமணியம் நடித்துள்ளனர். ஸ்ரீகெங்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஆர்.போத்திராஜ் தயாரித்துள்ளார். கந்தசாமி கோபால் ஒளிப்பதிவு செய்ய, மீரா லால் இசை அமைத்துள்ளார். டிஷ்யன் சாரதி எடிட்டிங் செய்ய, ஆர்.நட்ராஜ் இணை தயாரிப்பு செய்துள்ளார். மோகன், மருதபரணி, ஆத்தூர் பெரியசாமி பாடல்கள் எழுதியுள்ளனர். அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது.
