சென்னை: 12 மணி வரை கைது செய்ய கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக-வினர் போரட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர். தமிழகம் முழுவதுமுள்ள திமுக-வினர் தங்களின் தலைவர் இது செய்யப்பட்டதை கண்டித்து சாலைகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
திருவாரூர், பொள்ளாச்சி, ராசிபுரம், தஞ்சை, ஈரோடு, புதுக்கோட்டை, விழுப்புரம் என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் திமுக-வினர் போரட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.
