×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக வேளாண் பட்ஜெட் நகலுடன் அமைச்சர் வினோத் சுவாமி தரிசனம்

 

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக வேளாண்துறை அமைச்சர் வினோத் நேற்று காலை தமிழக பட்ஜெட் நகலுடன் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்து தீர்த்த பிரசாதம் வழங்கினர். பின்னர் வெளியே வந்த அமைச்சர் வினோத் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழக அரசின் 2026-2027ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் வேளாண்துறைக்கு தனி பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் நகலுடன் ஏழுமலையானை வழிபாடு செய்ேதன்’ என்றார்.

Tags : Minister ,Vinoth Swamy ,Tirupati Ezhumalaiyan Temple ,Agriculture ,Tirumala ,Tamil Nadu ,Vinoth ,Ranganathar Mandapam ,
× RELATED கரப்பான்பூச்சி ஜனதா தலைவர் அபிஜித்துக்கு திடீர் உடல்நலக்குறைவு