×

ஊழல் நிறைந்த கல்வி முறை மாணவர்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

 

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிட்டுள்ளதாவது: தங்களிடம் நேர்மையாக இல்லாத ஒரு அமைப்பில், நமது மாணவர்கள் நேர்மையாக உழைக்கச் சொல்லப்படுகிறார்கள். ஆனால் பிரதமர் மோடியோ, மாணவர்களை மன்னிப்பதாக பேசும் துணிச்சலைக் கொண்டிருக்கிறார். ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளையை இழந்து துயருறுவதை பார்ப்பதை விட வேதனையானது வேறொன்றுமில்லை.

நீட் தேர்வு விவகாரத்தில் உயிரிழந்து துயரத்தில் இருக்கும் மாணவர்களின் ஒரு பெற்றோரைக்கூட மோடி சந்தித்ததில்லை. வினாத்தாள் கசிவினால் எதிர்காலம் பறிக்கப்பட்ட ஒரு மாணவனுடன் கூட அவர் பேசியதில்லை. இந்திய மாணவர்களுக்கு அவருடைய மன்னிப்பு தேவையில்லை. அவர்களுக்கு அவருடைய மன்னிப்புதான் கிடைக்க வேண்டும்.சீர் கெட்ட மற்றும் ஊழல் நிறைந்த கல்வி முறைக்காக மாணவர்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags : PM ,Rahul Gandhi ,New Delhi ,Lok Sabha ,X-Site ,Modi ,
× RELATED கரப்பான்பூச்சி ஜனதா தலைவர் அபிஜித்துக்கு திடீர் உடல்நலக்குறைவு