காத்மண்ட்: பாகிஸ்தானின் காரகோரம் மலைத்தொடரில் கே2க்கு அருகில் 8051மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது பிராட் பீக் சிகரமானது மலையேற்றத்துக்கு மிகவும் சவாலான சிகரங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. இந்நிலையில் பிரபல மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட நேபாளத்தை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் பேர் உட்பட 10 பேர் மலையேற்றத்தில் ஈடுபட்டனர், சுமார் 7000மீட்டர் உயரத்தில் வியாழன்று திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் 10 மலையேற்ற வீரர்களும் மாயமானார்கள்.
இதனை தொடர்ந்து மீட்பு பணிகளில்முதல்கட்டமாக 4 மலையேற்ற வீரர்களின் உடலை பாகிஸ்தான் மீட்பு படையினர் மீட்டனர். நேற்று மீட்டும் மீட்பு பணிகள் தொடங்கியது. அப்போது பிரபல மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 6 பேரின் சடலங்களும் நேற்று கண்டறியப்படடது. பிராட் பீக் மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் புர்ஜா துரதிஷ்டவசமாக உயிரிழந்தார் என மிகுந்த மனவேதனையுடன் உறுதிப்படுத்துவதாக எலைட் எக்ஸ்பெடிஷன் நிறுவனம் பதிவிட்டுள்ளது.
