×

சிஏபிஎப் சட்டத்துக்கு எதிராக 3,000 கேடர் அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு

 

புதுடெல்லி: மத்திய ஆயுத காவல் படைகளில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பணி நியமனத்தை குறைத்து அந்தந்தப் படைகளின் சொந்த கேடர் அதிகாரிகளுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கக் கோரி உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்புக்கு மாறாக ஐபிஎஸ் அதிகாரிகளின் இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக்கும் வகையில் புதிய சிஆர்பிஎப் பொது நிர்வாகச் சட்டத்தை ஒன்றிய அரசு இயற்றியது.

இதை எதிர்த்து 3,000 கேடர் அதிகாரிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை நிலைநாட்ட உச்ச நீதிமன்றத்தை அணுக அனுமதிக்கும் அரசியலமைப்பின் 32வது பிரிவின் கீழ் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனு அடுத்த சில நாட்களுக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

Tags : Supreme Court ,New Delhi ,Central Armed Police Forces ,
× RELATED கரப்பான்பூச்சி ஜனதா தலைவர் அபிஜித்துக்கு திடீர் உடல்நலக்குறைவு