சென்னை: தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் தொடங்குகிறது. ஆகஸ்ட் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில், 19,000 அதிகாரிகளின் மேற்பார்வையில், 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். 33 கேள்விகளை கொண்ட ஒரு கட்டமைக்கப்பட்ட கேள்வித்தாளை பயன்படுத்தி, இந்த பணி மேற்கொள்ளப்படும். வீட்டுவசதி நிலை, அடிப்படை வசதிகள் போன்ற முக்கிய தரவுகள் சேகரிக்கப்படும்.
டிஜிட்டல் முறையில் பதிவு செய்ய ஒரு பிரத்யேக மொபைல் செயலி பயன்படுத்துவார்கள். 1948ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி, சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் சட்டப்பூர்வமாக பாதுகாக்கப்பட்டு, முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட்டு, புள்ளிவிவர பகுப்பாய்வு, பொதுக்கொள்கை உருவாக்கம் ஆகியவற்றிற்காக மட்டுமே பிரத்யேகமாக பயன்படுத்தப்படும். சுய கணக்கெடுப்பை நிறைவு செய்துள்ளவர்கள், கணக்கெடுப்பாளரிடம் பகிர்ந்துகொள்ள, தாங்கள் உருவாக்கிய சுய கணக்கெடுப்பு அடையாள எண்ணை உடனடியாக கைவசம் வைத்திருக்க வேண்டும்.
