தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக செயலியில் முகப்பு டிசைனில் மாற்றம்: போக்குவரத்து துறை வெளியீடு

 

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக செயலியில் முகப்பு டிசைனில் மாற்றம் செய்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஆன்லைன் பேருந்து முன்பதிவு செயலி புதிய வடிவமைப்புடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்டின் மூலம் செயலியில் உள்நுழையும் பயனர்களுக்கு முகப்புப் பக்கத்தில் முதல்வர் விஜய்யின் புகைப்படம் மற்றும் தமிழ்நாடு அரசின் லட்சினை இடம்பெற்றுள்ளது. அதற்கு கீழே, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’ என்ற திருக்குறளும் இடம் பெற்றுள்ளது.

இதனுடன், செயலியின் வண்ண வடிவமைப்பிலும் மாற்றம் செய்யப்பட்டு, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களை மையமாகக் கொண்டு புதிய தோற்றம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகள் தங்களுக்கு தேவையான சேவைகளை விரைவாக கண்டறிந்து, எளிதில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வகையில் செயலியின் User Interface முழுமையாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.இதனிடையே, சமீபத்தில் புதிதாக கொள்முதல் செய்யப்பட்ட அரசு பேருந்துகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட மஞ்சள் சிவப்பு வண்ண திட்டத்துடன் ஒத்துப்போகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: