மதுரை: தாமிரபரணி ஆற்றில் அஸ்தியை கரைக்க அனுமதி, ஆனால் பானையை வீசக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தாமிரபரணியை மாசுபடுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என உள்ளாட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றவும், இறுதி சடங்கு என்ற பெயரில் ஆற்றை அசுத்தப்படுத்துவதை தடுக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவும். ஈமச்சடங்கு என்ற பெயரில் தாமிரபரணி ஆற்றில் ஆடை, அஸ்தி பானையை வீசக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
