மதுபோதையில் கார் ஓட்டி சிறுவன் உயிரிழந்த வழக்கு: தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் சிறை

சென்னை: மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் சிறுவன் உயிரிழந்த வழக்கில் தொழிலதிபருக்கு 5 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது. தொழிலதிபர் ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2013ல் ஷாஜி புருஷோத்தமன் மதுபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதில் 12 வயது சிறுவன் உயிரிழந்தார். போதையில் கார் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்திய வழக்கில் ஷாஜி புருஷோத்தமன் குற்றவாளி என கடந்த மாதம் அறிவித்துள்ளது.

Related Stories: