அறந்தாங்கி : மணமேல்குடி அருகே நண்டு ஓடு அவிக்கும் கம்பெனியை நீதிமன்ற உத்தரவு படி போலீசார் முன்னிலையில் வருவாய் துறையினர் மூடி சீல் வைத்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா அழகன்வயல் கிராமத்தில் அனுமதி இன்றி சுற்றுப்புறச் சூழலுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்த நண்டு ஓடு அவிக்கும் கம்பெனியை அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் செல்வி அபிநயா செயல்முறைகளின் படி நேற்று மணமேல்குடி தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) வீரையா மணமேல்குடி காவல் ஆய்வாளர் பாலச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வருவாய்த்துறை காவல்துறை ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.
