புதுக்கோட்டை: ஆலங்குடி சாலையில் உள்ள கேப்பரை பகுதியில் யானை தந்தங்களை விற்க முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு – கர்நாடக எல்லைப் பகுதியில் இருந்து யானை தந்தங்களைக் கடத்தி வருவதாக வனத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், யானை தந்தங்களை விற்க முயன்ற ரோகித், வினோத், சிவக்குமார், அருளானந்தம், சாமிநாதன், கார்த்திகேயன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
