சென்னை: காவிரி பிரச்சனையில் விஷப்பரீட்சை வேண்டாம் என முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். சட்டப்பூர்வமாக போராடி பெற்ற உரிமைகளை சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிவிடக்கூடாது என்பதே விவசாயிகள் குரல் என்று இவ்வாறு கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
- பிற்பகல்
- விஜய்
- கர்நாடக
- திமுக தலைவர்
- மு கே. ஸ்டாலின்
- சென்னை
- முதல் அமைச்சர்
- விஷாபர்
- கே. ஸ்டாலின்
- தமிழ்நாடு அரசு
