கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை கூடுதல் விலைக்கு மது விற்கும் பணியாளர்கள் இடை நீக்கம் செய்யப்படுவர்: டாஸ்மாக் நிர்வாகம்

 

சென்னை: கூடுதல் விலைக்கு மது விற்போர் மீதான நடவடிக்கை குறித்து திருத்திய வழிகாட்டுதல்களை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டது. கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை கூடுதல் விலைக்கு மது விற்கும் பணியாளர்கள் இடை நீக்கம் செய்யப்படுவர். ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகும் பணியாளர்களின் விவரம் அவர்களின் பணிப் பதிவேட்டில் பதிவாகும். கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பது முதன்முறை கண்டறியப்பட்டால் ஒரு மாதம் பணியிடை நீக்கம் செய்யப்படுவர். கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது 2வது முறையாக கண்டறியப்பட்டால் 3 மாதம் பணியிடைநீக்கம்; 3வது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நோட்டீஸ்; 3வது முறையாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

Related Stories: