கரூரில் 41 பேர் இறந்ததற்கு வராத கண்ணீர், ஜனநாயகனுக்கு வருகிறது: கழுவி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

 

திருச்சி: தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் நேற்று ரிலீசானது. அனைத்து அமைச்சர்கள், பெரும்பாலான எம்எல்ஏக்கள் நேற்று காலை திரையரங்குகளுக்கு சென்று முதல் காட்சியில் ஜனநாயகனை கண்டு ரசித்தனர். சென்னையில் புஸ்ஸி ஆனந்த், ஈரோட்டில் விஜய் பாலாஜி, புதுக்கோட்டையில் முகமது பர்வேஸ் உள்ளிட்ட அமைச்சர்கள், சில எம்எல்ஏக்கள் படம் பார்த்துக்கொண்டிருந்த போதே கண்ணீர் விட்டு அழுதனர். அதேபோல் கரூர் மாவட்ட தவெக ெசயலாளர் மதியழகனும் தியேட்டரில் கண்ணீர் சிந்தினார். இது விஜய்க்கு கடைசி படம் என்பதால் அவர்கள் கண்ணீர் விட்டு அழுததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் இந்த செயல்களை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். கரூரில் 41 பேர் இறந்தனர். அப்போது இவர்கள் எல்லாம் அழுகவில்லை. இப்போது திரையரங்குகளில் உட்கார்ந்து கண்ணீர் சிந்துகின்றனர். உலக மகா நடிப்புடா சாமி என கிண்டலாக பதிவிட்டுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் மேகதாது விவகாரம் கடந்த சில வாரங்களாக பேசுபொருளாகி உள்ளது. அதுபற்றி முதல்வர் விஜய் இதுவரை வாய் திறக்கவில்லை. கர்நாடகாவில் படம் ரிலீசாகி நல்ல முறையில் ஓட வேண்டும் என்பதற்காகவே விஜய் மவுனமாக உள்ளார் என்றும் கலாய்த்து வருகின்றனர்.
சட்டசபையில் முதல்வர் விஜய் காட்டிய ஆக்‌ஷனை படத்தின் டைட்டிலில் சேர்த்துள்ளனர்.

இதன்மூலம் சட்டசபையில் சூட்டிங் நடக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கூறியது உண்மையாகி விட்டது என்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் தியேட்டருக்கு ஒட்டுமொத்தமாக அமைச்சர்கள் சென்று திரைப்படம் பார்ப்பது தான் மக்கள் பணியா, இதற்காக தான் மக்கள் ஓட்டு போட்டார்களா, தவெக அமைச்சர்கள் மக்கள் பிரதிநிதியாக எப்போது மாறுவார்கள் என்றும் நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Related Stories: