தூத்துக்குடி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அருணாச்சலம் உடலுக்கு பிரேத பரிசோதனை முடிந்தது. அருணாச்சலம் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்வது முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி காவல் மரண விவகாரத்தில் உயிரிழந்த அருணாச்சலம் உறவினர்கள் 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தென்பாகம் காவல் நிலையத்தில் இளைஞர் அருணாச்சலத்தை போலீஸ் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் புகார்.
