மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் குடும்பம் திரைப்படத்தை பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள்: உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் குடும்பம். திரைப்படத்தை பார்த்து கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள் என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாசலம் என்னும் இளைஞர், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி மரணமடைந்து இருப்பது வேதனை அளிக்கிறது.

போலீஸ் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாசலமே எடுத்துச் சொன்னதைப் பார்க்கும் போது நெஞ்சம் கலங்குகிறது. காவல் மரணங்களின் போது துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மகனை இழந்து கண்ணீர் வடிக்கும் அருணாசலத்தின் குடும்பத்துக்கு, திரைப்படத்தை பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்கள் என்ன பதில் வைத்து இருக்கிறார்கள்? இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: