முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கு விரைந்து விசாரணை நடத்தப்படும்: தலைமை நீதிபதி உறுதி

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் பிரதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருப்பினும் அணை விவகாரத்தில் மேற்பார்வைக் குழு வழிமுறைகளை செயல்படுத்த கேரளா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் உமாபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில் நேற்று ஒரு முறையீட்டை முன்வைத்தார். அதில்,\\” முன்னலைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கு கேரளா அரசு தரப்பில் தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக முக்கிய உத்தரவுகளை நீதிமன்றத்திடம் பெற வேண்டி இருக்கிறது.

எனவே முல்லைப் பெரியாறு தொடர்பாக நிலுவையில் இருக்கும் பிரதான வழக்கை விரைந்து பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும். குறிப்பாக இன்று (நேற்று) விசாரணைக்கு இடம்பெற்ற நிலையில், நேரமில்லாத காரணத்தினால் வழக்கு எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த்,\\” முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரதான வழக்கை நாங்கள் விரைவாக பட்டியலிட்டு விசாரணை நடத்துகிறோம் என்று உறுதியாக தெரிவித்தார்.

Related Stories: