புதுடெல்லி: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மனைவியும், இமயமலை மாற்று கல்வி நிறுவனத்தின் இணை இயக்குநருமான கீதாஞ்சலி ஜே.ஆங்மோ தன் எக்ஸ் பதிவில், “ஒரு கல்வியாளராக, ஊடகங்களில் நம் மாணவர்களின் பிம்பங்கள் சிதைக்கப்படுவதை பார்க்கும்போது மிகுந்த வேதனை தருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தை டெல்லியின் பிற இடங்களில் நடக்கும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புபடுத்தாதீர்கள். நமது குழந்தைகள் வில்லன்களாக சித்தரிக்கப்பட கூடாது. அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பிரதமர் இல்லத்திற்கு அருகே ஜூலை 21 அன்று ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் நடத்திய போராட்டம் நேர்மையற்றது. பொதுமக்களை இனி ஏமாற்ற முடியாது. இது விழிப்புணர்வு பெற்ற இந்தியா. நேர்மையற்றவர்கள் இளைஞர்களால் தூக்கியெறியப்படுவார்கள்’ என்றார்.
