டெல்லி: ஒரு வினாத்தாள் கசிவைக் கூடத் தடுக்க முடியாத கையாலாகாதவராக உள்ளீர்கள் என்று பிரதமர் மோடியை ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த நாடு உங்கள் தந்தையின் சொத்து அல்ல, மிரட்டுவதை நிறுத்துங்கள். சொந்த நாட்டின் குழந்தைகள் மீதான கொடூரத் தாக்குதல் வெட்கக்கேடானது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
