நீட் வினாத்தாள் கசிவு என்பது தேசியப் பிரச்சனை; கட்சி அரசியலை தவிர்க்க வேண்டும்: பிரதமர் மோடி

டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பானவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற வினாத்தாள் கசிவுகளைத் தடுப்பது ஒரு தேசியப் பொறுப்பு என்றும் பிரதமர் மோடி கூறியதாக ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார். குறைபாடற்ற தேர்வு முறையை உருவாக்குவதற்கு கூட்டு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் வலியுறுத்தியதாக அவர் கூறினார்.

என்டிஏ நாடாளுமன்றக் கட்சியின் ‘மங்கள் மிலன்’ கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ நீட் முறைகேடுகள் தொடர்பாக பிரதமர் மோடி அளித்த வலியுறுத்தல் குறித்து கூறினார்.

ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது:
நீட் வினாத்தாள் கசிவில் ஈடுபட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும். நீட் வினாத்தாள் கசிவு என்பது ஒரு தேசியப் பிரச்சினை. அது ஒரு மாநிலம் அல்லது ஒன்றிய அரசுக்கு மட்டும் உரியதல்ல என்பதால், “இதை ஒரு கட்சி அரசியலின் பிரச்சினையாகக் கருதக்கடாது”. ‘இளைஞர்களின் பாதுகாப்பும் எதிர்காலமும்’ அரசின் முன்னுரிமை. என்று பிரதமர் கூறினார்.

சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதில் என்டிஏ கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையாக இருக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். மேலும், நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றுமாறு எதிர்க்கட்சிகளுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்தார். அரசியல் வேறுபாடுகள் நிலவினாலும், நாட்டின் எதிர்காலத்திற்காகவும் அதன் இளைஞர்களின் நலனுக்காகவும் உழைப்பது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமான பகிரப்பட்ட பொறுப்பாகும்” என்று பிரதமர் மோடி கூறியதாக ரிஜிஜு தெரிவித்தார்.

நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வியமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று நாடாளுமன்றத்தை நோக்கு பேரணியாக சென்றனர். இந்த நிலையில் கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 118 காவலர்கள், 60-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காயமடைந்ததாகவும், 20 அரசு வாகனங்கள் சேதமடைந்ததாகவும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் 2-வது நாளாக டெல்லியில் போராட்டம் தொடர்கிறது. இந்த நிலையில் இன்று பிரதமர் மோடி இவ்வாறு பேசியுள்ளார்.

Related Stories: