லண்டன்: இங்கிலாந்து நாட்டில் ஆளும் தொழிலாளர் கட்சி தலைவராகவும், பிரதமராகவும் இருந்த கெய்ர் ஸ்டார்மர் கடந்த மாதம் பதவி விலகினார். இதையடுத்து தொழிலாளர் கட்சி தலைவர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் ஆன்டி பர்ன்ஹாம்(56) மட்டுமே போட்டியிட்டதால், அவர் முறைப்படி தொழிலாளர் கட்சி தலைவராக கடந்த வியாழக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கெய்ர் ஸ்டார்மர் நேற்று மன்னர் 3ம் சார்லசை சந்தித்து முறைப்படி தனது பதவி விலகல் கடிதத்தை கொடுத்தார். இதையடுத்து மன்னரின் அழைப்பை ஏற்று பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் பதவி ஏற்று கொண்டார். கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்தின் 7 வது பிரதமர் ஆன்டி பர்ன்ஹாம் என்பது குறிப்பிடத் தக்கது.
