ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களின் தாக்குதலுக்கு எதிராகப் பாதுகாக்கும் நடவடிக்கையின்போது, ஜோர்டானில் வெள்ளிக்கிழமை அன்று இரண்டு அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால், போர் தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்ட அமெரிக்கப் படை வீரர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் 430-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தனது அறிக்கையில், ஜூலை 17 அன்று, ஜோர்டானில் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு எதிராக சென்ட்காம் மற்றும் அதன் கூட்டாளிப் படைகள் தற்காப்பில் ஈடுபட்டபோது, இரண்டு அமெரிக்கப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக பென்டகன் தெரிவித்துள்ளது. மேலும், ஒரு படை வீரரை தற்போது காணவில்லை என்றும் அது கூறியுள்ளது.
அந்த அறிக்கையின்படி, நான்கு அமெரிக்கப் படை வீரர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ஜோர்டானில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் நால்வரும் பின்னர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சிறு காயங்களுக்காகப் பரிசோதிக்கப்பட்ட மற்ற வீரர்கள் ஏற்கனவே பணிக்குத் திரும்பிவிட்டனர்.
