தெஹ்ரான்: ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரு எண்ணெய் கப்பல்கள் மீது குண்டுவீசி தாக்கியதாக ஈரான் அறிவித்துள்ளது. ஏவுகணைகளால் தாக்கியதில் இரு கப்பல்களும் தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் கூறியுள்ளது. மறுபுறம் சவுதி அரேபியக் கப்பல்களை தடுக்கப் போவதாக ஏமனில் உள்ள ஈரானின் நட்பு அமைப்பான ஹவுதி அறிவித்துள்ளது. ஜோர்டான், பஹ்ரைன், குவைத்தில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தகவல் அளித்துள்ளது.
