உக்ரைன் சரக்கு கப்பல் மீது ரஷ்யா தாக்குதலில் 4 இந்தியர்கள் பலி

 

கீவ்: உக்ரைன் சரக்கு கப்பல் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 இந்தியர்கள் பலியாகி உள்ளனர்.ரஷ்யா-உக்ரைன் இடையே நேற்று முன்தினம் கடும் மோதல் நடந்தது. ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணை ஏவி நடத்திய தாக்குதலில் உக்ரைனில் 6 பேர் பலியாகினர். பதிலுக்கு உக்ரைன் 400 டிரோன்களை ஏவியது. இதில் மாஸ்கோவில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். எண்ணெய் சேமிப்பகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து ரஷ்யா க்ரூஸ் ஏவுகணைகளை ஏவி உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இதில், துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற எம்வி கோல்டன் லியோ கப்பல் மீது ஏவுகணை தாக்கி கப்பல் தீப்பிடித்தது. இந்த தாக்குதலில் இந்தியர்கள் 4 பேர் கொல்லப்பட்டதாக இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. கப்பல் பைலட் உட்பட 10 பேர் இந்த தாக்குதலில் பலியாகி உள்ளனர்.

Related Stories: