கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஓடும் ரயிலில் கூலிப்படையை ஏவி கணவனை சுட்டுக் கொன்ற பெண் இன்ஸ்பெக்டர்: பீகாரில் பயங்கரம்

 

கதிஹார்: பீகாரில் ரயிலில் கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த வழக்கில் மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் உள்பட மூவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பீகார் மாநிலம் மான்சி ரயில்வே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்லாகாட் அருகே கடந்த ஜூன் 11ம் தேதி ஜன்சாதாரண விரைவு ரயிலில் பயணம் செய்த மின்சாரத துறையில் ஊழியர் தேவ்குமார் குஞ்சன் என்பவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடத்த பரவுனி ரயில்வே துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. தொழில்நுட்ப மற்றும் அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கதிஹார் ரயில்வே மாவட்ட போலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படை பிரிவினர் இணைந்து நடத்திய சோதனையில், தேவ்குமார் குஞ்சனின் மனைவியும் சுபாலில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் (இன்ஸ்பெக்டர்) பணிபுரியும் சுமிதா குமாரி, அவரது கள்ளக்காதலன் அஜித் குமார் மற்றும் கூலிப்படை கொலையாளி ராஜூ குமார் என்கிற தீரஜ் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அஜித் குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், ‘எனக்கும் சுமிதா குமாரிக்கும் இடையிலான கள்ளக்காதல் உறவுக்கு தேவ்குமார் குஞ்சன் இடையூறாக இருந்தார். இதனால் திட்டமிட்டு கூலிப்படையைச் சேர்ந்த தீரஜியின் ஆட்களை ஏவி, தேவ்குமார் குஞ்சன் ரயிலில் பயணம் செய்தபோது அவரை சுட்டுக் கொன்றோம்’ என்று கூறினார். கைது செய்யப்பட்ட தீரஜ் மீது ஏற்கனவே 2025ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதுடன், குற்றத்திற்குப் பயன்படுத்திய செல்போன்கள் மற்றும் சிம்கார்டுகளை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: